டாட்டூக்களை முறையாக பராமரிக்காவிட்டால் சில மாதங்களிலேயே பொலிவை இழக்க தொடங்கி விடும். டாட்டூக்களை முறையாக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
கைகளிலும், உடல் பாகங்களிலும் விதவிதமான டாட்டூக்களை பதித்துக்கொள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப கருப்பு நிறம் மட்டுமின்றி வண்ணமயமான நிறக்கலவையிலும் டாட்டூக்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.
அவைகளை முறையாக பராமரிக்காவிட்டால் சில மாதங்களிலேயே பொலிவை இழக்க தொடங்கி விடும். டாட்டூக்களை முறையாக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* டாட்டூக்கள் வரைந்த பிறகு ஒரு வாரம் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்கவேண்டும். நீச்சல் பயிற் சியை தவிர்க்க வேண்டும்.
* மதுப்பழக்கம் கொண்டவர்கள் மூன்று, நான்கு நாட்களாவது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மதுவில் இருக்கும் ஆல்ஹகால் ரத்தத்தில் கலந்து டாட்டூக்களின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.
* ஒரு வாரம் கழித்து ‘டாட் வேக்ஸ்’ எனப்படும் மாய்ஸ்ரேசரை கொண்டு அதன் மீது மசாஜ் செய்ய வேண்டும்.அது டாட்டூக்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
* சூரிய கதிர்கள் டாட்டூக்களுக்கு எதிரானவை. அவை டாட்டூக்கள் மீது நேரடியாக படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சூரிய கதிர்களில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் டாட்டூக்களின்பொலிவை குறைக்கும். அதோடு டாட்டூக்கள் மூலம் ஊடுருவி சருமத்திற்கும் கேடு விளைவிக்கவும் செய்யும்.
* உடலில் டாட்டூக்கள் வரைந்திருப்பவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. அவை டாட்டூக்களில் உராய்வை ஏற்படுத்தி அதன் நிறத்தை மங்க செய்துவிடும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..