19,Apr 2024 (Fri)
  
CH
உலக செய்தி

ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் பலன் அளிக்கும்

ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த 3-வது டோசை மக்களுக்கு செலுத்த பல்வேறு நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

கொரோனாவைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயர்கள் சூட்டப்பட்டன.

இந்த நிலையில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் என்ற அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வைரஸ் உருமாறியதால் 3-வது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) செலுத்த பல்வேறு நாடுகள் முடிவு செய்தன.

இதற்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளன.

தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த 3-வது டோசை மக்களுக்கு செலுத்த பல்வேறு நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள பைசர் நிறுவனம் 3-வது டோசை செலுத்துவது நல்ல பலன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி செயல் திறன் மிக்கதாக இருக்கும் என்று இங்கிலாந்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:- கொரோனா தடுப்பு மருந்தின் 3-வது பூஸ்டர் டோஸ் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராக 70 முதல் 75 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கிறது.


2 டோஸ் தடுப்பு மருந்துகள் டெல்டா மாறுபாடுடன் ஒப்பிடும்போது அறிகுறி உள்ள தொற்றுக்கு எதிராக மிக குறைந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. 3-வது டோஸ் மூலம் 581 ஒமைக்ரான் பாதிப்புகளின் தரவுகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் புதிய மாறுபாட்டுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு போக்குமாறாமல் நீடித்தால் இந்த மாத இறுதிக்குள் 10 லட்சம் பாதிப்பை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோய் தடுப்பு தலைவர் டாக்டர் மேரி ராம்சே கூறும்போது, ‘ஆரம்ப கட்ட மதிப்பீடுகளை எச்சரிக்கையுடன் ஆய்வு செய்ய வேண்டும். 2-வது டோஸ் செலுத்திய சில மாதங்களுக்கு பிறகு டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கும் ஆபத்து அதிக அளவில் உள்ளது என்பதை குறிக்கிறது’ என்றார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் பலன் அளிக்கும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு