17,May 2024 (Fri)
  
CH
சினிமா

பூதமாக மாறிய பிரபுதேவா...

பொன் மாணிக்கவேல் படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில், தேள், யங் மங் சங், பஹிரா உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமையுடன் இருக்கும் பிரபுதேவா வித்தியாசமான கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பொய்க்கால் குதிரை என்ற படத்தில் ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். ஒரு நிஜ கால் மற்றும் ஒரு செயற்கை காலுடன் இருக்கும் பிரபுதேவாவின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் `மை டியர் பூதம்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் பூதமாக நடிக்கிறார். பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

படத்தை ராகவன் இயக்குகிறார். இதில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருந்த தேள் படம் சில பிரச்சினைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. `யங் மங் சங்', `பஹிரா' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பூதமாக மாறிய பிரபுதேவா...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு