10,Jun 2026 (Wed)
  
CH

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: readmore_headline_slider

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

உலக செய்தி

ஒமைக்ரான் தீவிரம் எச்சரிக்கும் பில்கேட்ஸ்

ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகிவிடும். ஒமைக்ரான் அலையால் ஒரு நாடு பாதிக்கப்படால் 3 மாதங்கள் வரை பாதிப்பு இருக்கும் என எச்சரித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும் கவலைத்தரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டது:-

‘நாம் கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன்.

இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் இருக்கிறது. விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி விடும். ஆனால் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் நம்மால் கூறமுடியவில்லை. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகிவிடும். அமெரிக்காவில் ஒரே வாரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இந்த தொற்றில் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கும்.

ஒமைக்ரான் அலையால் ஒரு நாடு பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பாதிப்பு இருக்கும். பிறகு குறைந்துவிடும். ஒருநாள் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும். நாம் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக்கொண்டால் விரைவில் அந்த நாள் வரும்.

இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஒமைக்ரான் தீவிரம் எச்சரிக்கும் பில்கேட்ஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு