தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அன்னபூரணியை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என இயக்குநரும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொண்டு பொதுமக்கள் பக்தி பரவசத்தில் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றனர். அதில் திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்தே பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னபூரணி மீது புகார் எழுந்தது.
அன்னபூரணி இந்த நிலையில் தற்போது திடீர் சாமியாராகி உள்ள அன்னபூரணி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். பலரும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்த போது எனக்கு சிரிப்பு வருகிறது.
தனிப்பட்ட விஷயம் அதே நேரத்தில் மக்கள் இப்படி போலி சாமியார்களை கண்டு ஏமாந்து போகிறார்களே என மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அன்னபூரணியின் கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரது தனிப்பட்ட விஷயம்.
ரெடி ஆனால் இது போல் சாமி என சொல்லிக் கொண்டு அவர் காலில் விழுவது தவறான விஷயம். முட்டாள்தனமும் கூட. சாமி என சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எத்தனை நாட்கள்தான் ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ அதுவரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். இதில் ஜாதி, மதம் என்றெல்லாம் வேண்டாம்.
மக்கள் நான் கடவுளின் அவதாரம் என சொல்லிக் கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக் கூடாது. சிந்தித்து கண் விழித்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. நிகழ்ச்சிக்கு வந்த போது அந்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கினேன். ஆனாலும் அவருடன்தான் வாழுவேன் என அன்னபூரணி கூறினார். பெற்றோரை தவிர வேறு யார் காலிலும் விழாதீர்கள் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..