05,May 2024 (Sun)
  
CH
சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு பணியாற்றியிருக்கும் சினிமா பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது தமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.




கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு