29,Apr 2024 (Mon)
  
CH
ஆரோக்கியம்

பாதுகாப்பான உணவை சாப்பிடுவது நல்லது...

ஒவ்வொரு உணவுப் பொருளிலும் எந்த அளவுக்கு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருக்கின்றன என்பதை அறிந்து, தெரிந்து பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.

அனைவருமே பாதுகாப்பான உணவை சாப்பிடுவதைத்தான் விரும்புவோம். மனித வாழ்வில் பாதுகாப்பான உணவை சாப்பிடுவது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். இது அனைத்து மக்களுக்கும் கைகூடுவதில்லை. உணவுப் பொருள்களை விளைவிப்பதில் இருந்து அது தட்டில் உண்ணும் உணவாக கிடைக்கும் வரை அது பாதுகாப்பாக இருக்கிறதா என்பது கேள்விதான். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் எந்த அளவுக்கு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருக்கின்றன என்பதை அறிந்து, தெரிந்து பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.

ஒவ்வொரு பொருளிலும் உள்ள ரசாயன பொருட்களின் அளவை தெரிந்து கொள்வது மற்றும் அது உடல் ஏற்கத்தக்க அளவில் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதுதான் இதற்கு சிறந்த வழி. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் 17 ஆயிரம் வகையான பொருள்களை இந்த ஆய்வகங்கள் சோதித்து அவற்றுக்கு தரச்சான்று அளிக்கின்றன என்றால் சற்று வியப்பாக தான் இருக்கும்.

உணவுப் பொருள்களில் மிக முக்கியமான நான்கு உலோகக் கலவைகள் இருக்கக் கூடாது. அதாவது காட்மியம், ஆர்செனிக், பாதரசம்(மெர்குரி), ஈயம். இவை குறைந்த அளவில் இருந்தாலும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நமது உடலுக்கு தாமிரம் மற்றும் ஈயம் உள்ளிட்ட கனிமச் சத்துக்கள் தேவை. ஆனால் இவையே அதிக அளவில் சேர்க்கப்பட்டால் அது நச்சாக மாறிவிடும். இதேபோல குடிநீரில் உலோக கலவையோ அல்லது காற்றில் நச்சுபுகையோ கலந்தால் அது உடலின் செயல்பாடுகளை குலைத்துவிடும்.

எனவே உணவு பொருள்களை சோதிக்கும் ஆய்வகங்களின் தரத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகும். அமெரிக்காவில் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை பெறுவது மிகவும் கடினமாகும். அந்த அளவுக்கு விதிமுறைகள் அங்கு கடுமையாக உள்ளன. இதே அளவுக்கு விதிமுறைகளை இங்கும் கடுமையாக்க வேண்டும். உணவுப் பொருள் தரத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமில்லாத பொருட்களுக்கு அனுமதி அளிக்கவே கூடாது. இதுபோன்ற தொடர் கண்காணிப்புதான் அவசியம். அனைத்துக்கும் மேலாக ஆய்வகங்களின் தரத்தை உயர்த்துவது மிக அவசர அவசியமாகும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





பாதுகாப்பான உணவை சாப்பிடுவது நல்லது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு