25,Apr 2024 (Thu)
  
CH
சினிமா

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

 சிலம்பரசன் பட்டம் வாங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு அவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு