பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டுருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் தின நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்













0 Comments
No Comments Here ..