29,Mar 2024 (Fri)
  
CH
சினிமா

திரிஷா, ராய் லட்சுமியை தொடர்ந்து அமலாபாலுக்கு ‘கோல்டன் விசா’

மோகன்லால், மம்முட்டி, துல்கர், திரிஷா, ராய் லக்‌ஷ்மி போன்ற பலருக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசா தற்போது அமலாபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், திரிஷா, ராய் லட்சுமி ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது. 

இதுகுறித்து நடிகை அமலா பால் கூறுகையில் கோல்டன் விசா பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக ஜக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். இவர் மைனா, சிந்துசமவெளி, விஐபி உள்பட ஏராளமான தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




திரிஷா, ராய் லட்சுமியை தொடர்ந்து அமலாபாலுக்கு ‘கோல்டன் விசா’

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு