16,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

ஐ.நா. அதிகாரிகள் இருவர் கொலை வழக்கு.. 51 பேருக்கு தூக்கு தண்டனை..

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்கள் உருவாகியுள்ளது.

இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பொது மக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. அதனால் இந்த குழுக்களை ஒழிக்கவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டு அமைதியை ஏற்படுத்தவும் உள்நாட்டு படையுடன் இணைந்து ஐ.நா படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு இடையில் அந்நாட்டின் கசை மாகாணத்தில் 2017 ஆம் ஆண்டு அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை மூண்டது. இந்த வன்முறை தொடர்பாக ஐ.நா. சபைக்கு அறிக்கை அளிக்க அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஷார்ப் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஷைடா ஹடலன் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்த விசாரணை அதிகாரிகள் வன்முறை நடந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள கசை மகாணத்தில் காரில் சென்ற பொழுது ஆயுதமேந்திய கிளர்ச்சி கும்பலால் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட ஐ.நா விசாரணை அதிகாரிகள் இருவரும் 2017 மார்ச் 28ஆம் தேதி கிளர்ச்சியாளர்களால் கொலை செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் உடல்கள் அந்த மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. இந்த கொடூரமான செயல் ஐ.நா. அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, காங்கோ கொலையில் தொடர்புடையவர்கள் என 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐ.நா. விசாரணை அதிகாரிகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு காங்கோ ராணுவ கோர்ட்டில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வெளியானது.

தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 54 பேரில் 51 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் 51 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் இந்த கொலை வழக்கில் இதுவரை 22 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை துரிதப் படுத்தப்பட்டுள்ளது. 51 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும், காங்கோவில் தூக்கு தண்டனைக்கு எதிராக சட்டம் உள்ளதால் ஆயுள் தண்டனையாகவும் குறைக்கலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஐ.நா. அதிகாரிகள் இருவர் கொலை வழக்கு.. 51 பேருக்கு தூக்கு தண்டனை..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு