27,Apr 2024 (Sat)
  
CH
ஆரோக்கியம்

குறட்டை நோயை கண்டறியும் நவீன முறைகள்

மனிதனுக்கு தூக்கம் சுகமானது...இதில் குறட்டை என்பது கொடுமையானது. ஆகவே குறட்டை நோயை கண்டறியும் நவீன முறைகள் பல இருக்கிறது.

 

இதுகுறித்து ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை டாக்டர் சுந்தரகுமாா் கூறியதாவது:-

 

குறட்டை நோய் உறக்கம் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு உறங்குவதற்கு என்று ஒதுக்க வேண்டும். 

உறக்கம் என்பது கண் மூடி இருப்பது அல்ல. ஆழ்நிலை உறக்கமே ஆகும். 


நல்ல உறக்கம் இல்லையெனில் பகல் நேரங்களில் உடற்சோர்வு, மனச்சோர்வு, உறக்கம் வருதல், செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படும். இந்த உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஒன்று தான் குறட்டை. 


குறட்டை ஒரு வியாதியா அல்லது பழக்கமா? எல்லா குறட்டையும் வியாதியாக எடுத்துக்கொள்ள இயலாது. 30 சதவீத மக்களுக்கு பொதுவான பிரச்சினையாக குறட்டை உள்ளது. 


ஆனால், அவை அனைத்தும் வியாதி அல்ல. சில சமயங்களில் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வரலாம். அதற்கு obstructive sleep apnea (OSA) குறட்டை நோய் என்று பெயர். 


அறிகுறிகள் தூக்கத்தில் குறட்டையால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வருவது, காலையில் எழும் போது மீண்டும் தூங்க வேண்டும் என்று தோன்றுவது, உடல் சோர்வு, மனச்சோர்வு, பகலில் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம், சிறிய விஷயங்களில் கூட கோபம் வருதல் போன்றவை குறட்டை நோய் அறிகுறிகள் ஆகும்.


தீர்வுகள் உடல் பருமனாக இருந்தால் (உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ற பி.எம்.ஐ. இல்லையென்றால்) உடல் எடையை குறைப்பதே முக்கிய தீர்வு. அதற்கு உணவு பழக்கத்தில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சி போன்றவை வலியுறுத்தப்படும். 


Morbid Obesity எனக்கூடிய அதீத உடல் பருமனை குறைப்பது குறித்து பரிந்துரைக்கப்படும். continuous positive airway pressure (CPAP) என்ற கருவி பரிந்துரைக்கப்படும். இது ஒரு வெண்டிலேட்டர் போன்ற கருவி. இதை மூக்கிலும், வாயிலும் பொருத்திக்கொண்டு உறங்க முயற்சிக்கும் போது, உங்களது சுவாச பாதையின் அழுத்தத்தை எப்போதும் பாசிட்டிவாக வைக்கும் உத்தியை கையாளும். 


அதாவது உங்கள் சுவாச குழாயை எப்போதும் திறந்து வைக்க உதவும். இதனால் உங்கள் சுவாசம் சீராக இருக்கும். இதனால் குறட்டை இருக்காது. மேலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று, மறுநாள் விழிக்கையில், அதற்கான பலன்களை அனுபவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.





குறட்டை நோயை கண்டறியும் நவீன முறைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு