பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்த தலைமுடியில் 2 லட்சத்து 900 கிலோ தலை முடியை ஏலத்தில் விற்பனை செய்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 105 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை அவற்றின் நீளத்திற்கு ஏற்ப தரம் பிரித்து பாதுகாத்து தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைமுடி ஏலம் திருப்பதியில் நடைபெறும். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 9 ஆயிரம் கிலோ எடையுடைய தலை முடியை தேவஸ்தான நிர்வாகம் 105 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.
0 Comments
No Comments Here ..