15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

வாய்ப்பாட்டால் நிறுத்தப்பட்ட திருமணம்!

மணமகன் படிக்காதவர் என்பதால் மணமகள் திருமணத்தை நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.  திருமணத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது, மணமகன் படிக்காததால் மணப்பெண் ஒருவர் அவரை திருமணம் செய்ய மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உத்தரபிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. 

இந்த திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் மகன் படிக்காதவர் என்ற உண்மையை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மணமகள் தனது கணவனாக வரப்போகும் கணவரைப் பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு சுவாரஸ்யமான முறையை கையாண்டார்.

மணமகன் ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தபோது, ​​சந்தேகமடைந்த மணமகள் மணமகனிடம் 2-வது வாய்ப்பாட்டை சொல்லும் படி கூறியுள்ளார்.  ஆனால் மணமகன் அதற்கு பதிலளிக்க வில்லை. எனவே 2-வது வாய்ப்பாட்டை கூற முடியாததால் மணமகன் திருமணத்தை நிறுத்தினார். இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் மீண்டும் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தின் செய்தித்தாள் இன்ஸ்டாகிராமில் @shayar_yogi_ என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இது இப்போது வைரலாகி வருகிறது. இந்த செய்திக்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் தங்களுக்கு தற்போது 2-வது வாய்ப்பாடு நினைவில் இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.  இன்னும் சிலர் இனி, 2-வது வாய்ப்பாட்டை படித்த பிறகே மணமகன்கள் தங்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்று பதிவிட்டுள்ளார். 




வாய்ப்பாட்டால் நிறுத்தப்பட்ட திருமணம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு