13,May 2024 (Mon)
  
CH
சினிமா

சூதாட்ட செயலி வழக்கில் பிரபல நடிகர் கைது!

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் சாஹில் கான் சத்தீஸ்கரில் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றம் நடிகர் சஹில் கானின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து, மும்பை பொலிஸ் சைபர் செல் சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) சாஹில் கான் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பிடிபட்ட அவர் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சஹில் கானின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சத்தீஸ்கர் காவல்துறையினரின் உதவியுடன் 40 மணி நேரத்திற்கும் மேலாக தேடியப் பிறகு சஹில் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 

இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன்னதாக அவரிடம் விசாரணை நடத்தியது. 

மேலும், சாஹில் கான் 'தி லோட்டஸ் புக் ஆப்' இல் பங்குதாரராக உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர், 'லோட்டஸ் புக் 24/7' செயலியின் பங்குதாரராகவும் உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.

இந்தச் செயலி மூலம் தினமும் 200 கோடி இந்தியா ரூபாய் லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். 

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. 

இதுதொடர்பாக 2-வதாக தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் பூபேஷ் பாகெலின் பெயரை அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.

இது தொடர்பாகவும் அமலாக்கத் துறை ஏற்கெனவே பலரை கைது செய்துள்ளது. செயலியின் உரிமையாளர்கள் ரவி உப்பால் மற்றும் சவுரப் சந்திரகர் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.




சூதாட்ட செயலி வழக்கில் பிரபல நடிகர் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு