11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

அவசர நிலைமை

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுகின்றமையை அடுத்து உலகளாவிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சுகாதார ரீதியாக பின்னடைவிலுள்ள நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதலாவது கொரோனா நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

சீனாவின் வுஹான் பகுதியிலுள்ள பல்கலைகழகமொன்றில் கல்வி பயின்ற மாணவர் ஒருவரே இவ்வாறு நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமக 21 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீனாவில் 9 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் சீன பிரஜைகள், பிளாஸ்ரிக் முகக்கவசங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் தற்போது முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகக்கவசங்களின் கேள்விக்கு ஏற்றவாறு அவற்றை விநியோகிக்க முடியாதுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




அவசர நிலைமை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு