21,Nov 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

எப்பொழுது கருமுட்டை வெளியேறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள்

கருத்தரித்தல் என்பது கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு உணர்வு. அதிலும் நீண்ட காலமாக கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து வரும் தம்பதியினர் கருத்தரிக்கும் பொழுது அவர்கள் அடைகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். 12 முதல் 15 சதவீதமான தம்பதியினர் மலட்டுத்தன்மை காரணமாக ஒரு வருடம் முயற்சி செய்த பிறகும் கூட கருத்தரிப்பதில் சிக்கல்களை அனுபவிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இது ஒரு வித கோவத்தையும், ஏக்கத்தையும் உண்டாக்கலாம். சரியான நேரத்தில் உடலுறவு கொள்வது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த சரியான உடலுறவு நேரத்தை ஒரு சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய நாட்களை கண்டறிவது அவசியம்.


கருமுட்டை வெளிவரக்கூடிய ஓவுலேஷன் (Ovulation) என்ற செயல்முறைக்கு முன்பும், சில மணி நேரங்கள் பின்பும் கருத்தரித்தல் நடைபெறலாம். உங்களுக்கு எப்பொழுது கருமுட்டை வெளியேறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளது. அல்ட்ரா சவுண்ட், மாதவிடாய் சுழற்சி சம்பந்தப்பட்ட ஹார்மோன் அளவுகளை அளவிடும் சிறுநீர் பரிசோதனை மற்றும் பிறப்புறுப்பில் இருந்து வெளிவரும் திரவங்கள் அல்லது பீரியட் ட்ராக்கிங் அப்ளிகேஷன் போன்றவை இதில் அடங்கும்.


இந்த கருமுட்டை வெளிவரும் சமயத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது கருத்தரித்தல் செயல்முறையில் எவ்வளவு பாசிட்டிவான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடிக்க ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. யூரின் ஓவுலேஷன் பரிசோதனை செய்யாமல் உடலுறவு கொள்வதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் இருக்கும் பொழுது, இதே யூரினரி ஓவுலேஷன் பரிசோதனை செய்த பிறகு சரியான நேரத்தில் உடலுறவு கொள்வதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு 20 சதவீதம் முதல் 28% வரை அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறுநீர் ஓவுலேஷன் டெஸ்ட் செய்வது மிகவும் எளிது. இந்த பரிசோதனை கிட்டை நீங்கள் மெடிக்கல் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் ஒரு பெட்டியில் 5 முதல் 7 குச்சிகளுடன் வைக்கப்பட்டு இந்த கிட் கிடைக்கிறது. உங்களது மாதவிடாய் சுழற்சி 28 நாட்களில் ஏற்படுகிறது என்றால், உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட கடைசி நாளில் இருந்து 11-ஆம் நாள் அல்லது உங்களுக்கு கருமுட்டை வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய நாளிலிருந்து மூன்று அல்லது ஐந்து நாட்கள் முன்பிலிருந்து இந்த பரிசோதனையை நீங்கள் செய்ய தொடங்கலாம். இந்த குச்சியில் ஏற்படும் நிற மாற்றம் ஓவுலேஷன் 24 முதல் 36 மணி நேரத்தில் நடக்க இருக்கிறது என்பதை அறிவுறுத்தும். குறிப்பிட்ட அந்த டெஸ்டில் முடிவுகளை எப்படி கண்டுபிடிப்பது என்று அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுங்கள்




எப்பொழுது கருமுட்டை வெளியேறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு