05,May 2024 (Sun)
  
CH
BREAKINGNEWS

இசைஞானி. திரு. இளையராஜாவின் மகளும், தனது மனதை வருடும் குரலால் தமிழ் மக்களை மகிழ்வித்தவருமான பாடகி திருமதி. பவதாரினி மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

பின்னணி பாடகி பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 47. கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.


ராமன் அப்துல்லா புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார். பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.


பின்னணி பாடியது மட்டுமல்லாது , பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பவதாரிணி (Bhavatharini)(23 சூலை 1976 – 25 சனவரி 2024) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார்.இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார்.


இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.


இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.






இசைஞானி. திரு. இளையராஜாவின் மகளும், தனது மனதை வருடும் குரலால் தமிழ் மக்களை மகிழ்வித்தவருமான பாடகி திருமதி. பவதாரினி மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு