- பேட்ரிக் ஜாக்சன்
- பதவி,
- 2 மணி நேரங்களுக்கு முன்னர்
தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
பல போட்டி நிறுவனங்கள் ஏற்கனவே இதேபோன்ற சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றன.
பட மூலாதாரம்,
GETTY IMAGES
படக்குறிப்பு,
சித்தரிப்புப் படம்
மனித மூளையில் சிப் செயல்படுவது எப்படி?
நியூராலிங்க் மற்றும் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகிய இரண்டையும் பிபிசி நியூஸ் அணுகி கருத்து கேட்டது.
மனிதர்களின் உடலில் இதுபோன்ற சிப்பைப் பொருத்திப் பரிசோதிக்க மஸ்க்கின் நிறுவனத்திற்கு மே மாதம்அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதுபோன்ற அனுமதியைப் பெறுவதற்காக அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்பட்டது.
ஆறு ஆண்டு கால ஆய்வின் தொடக்கத்திற்கு இது ஒரு அனுமதியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து மனித முடியை விட மெல்லியதாக 64 நெகிழ்வான நூல்களை அறுவை சிகிச்சை மூலம் "இயக்க எண்ணத்தை" கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் வைக்க ஒரு ரோபோவை நியூராலிங்க் பயன்படுத்தியது.
இந்த நூல்கள் அதன் பரிசோதனை நடவடிக்கைக்கு உதவுகின்றன. இணைப்பு ஏதும் இல்லாமல் (வயர்லெஸ்) சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் மூளையில் உருவாகும் சமிக்ஞைகளை வயர்லெஸ் முறையில் பதிவுசெய்து, அவை டீகோட் செய்யும் கணினி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
- 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர்
- 9 மணி நேரங்களுக்கு முன்னர்
- சிந்துச் சமவெளி குறியீடுகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையா? புதிய ஆய்வு கூறுவது என்ன?
- 4 மணி நேரங்களுக்கு முன்னர்
பட மூலாதாரம்,
REUTERS
படக்குறிப்பு,
நியூராலிங்கின் இந்த முதல் தயாரிப்பு ‘டெலிபதி’ என்று அழைக்கப்படும் என ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார் .
'டெலிபதி' சாதனம் எவ்வாறு பயன்படும்?
முன்பு ட்விட்டர் என்று அறியப்பட்ட தனக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ இல் பதிவிட்ட மஸ்க், நியூராலிங்கின் இந்த முதல் தயாரிப்பு ‘டெலிபதி’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .
"உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மூலம் எந்தச் சாதனத்தையும், சிந்தனையின் மூலம் கட்டுப்படுத்தவும் இந்த டெலிபதி உதவும்," என்று அவர் கூறினார்.
"தங்கள் கை, கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு அவர்களது பிரச்னையைக் குறைக்க இந்த டெலிபதி தொடக்கத்தில் பயன்படுத்தப்படும்," என்று அவர் விளக்கினார்.
மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட மறைந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு அதிவேக தட்டச்சு செய்பவரை விட வேகமாக தமது எண்ணங்களை பிறருட்ன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நியூராலிங்க்கின் குறிக்கோள்," என்றார்.
0 Comments
No Comments Here ..