இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் மேலும் சில நாடுகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபெத், பின்லாந்து, பிலிப்பைன்ஸ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை உட்பட 21 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகளவு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் சீனாவுக்கான வர்த்தக விமானங்களை ரத்து செய்வத்கு தீர்மானித்துள்ளன.
அத்துடன் சீனா, ஹொங்கொங் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளில் செயற்படும் தங்களது அலுவலகங்களை மூடுவதற்கு GOOGLE நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..