06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை..

கொரோனா வைரஸ் தாக்கத்தின் கேந்திரமான வுஹான் நகர் உள்ளிட்ட முழு சீனாவிற்கும் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தமது பிரஜைகளை கோரியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள சுற்றுலா அறிவுறுத்தல் எச்சரிக்கையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு இடையே பரவுவதாக அமெரிக்க தெரிவித்துள்ளார்.

இலிநோய் பிராந்தியத்தில் உள்ள பெண்ணொருவரிடம் இருந்து அவரது கணவருக்கு இந்த தொற்று பரவியுள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பிரவேசித்த குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருந்ததுடன் பின்னர் அந்த தொற்று அவரது கணவருக்கும் பரவியுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவர் சீனாவிற்கு பயணிக்காத ஒருவர் எனவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீனாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சீனாவின் ஹீபேய் பிராந்திலுள்ள இந்திய பிரஜைகளை அழைத்து வருவதற்காக விசேட விமானமொன்று நியூடெல்லியிலிருந்து சீனாவுக்கு பயணிக்கவுள்ளது.

போயிங் 747 ரக விமானமொன்றே இவ்வாறு பயணிக்கவுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகாத இந்திய பிரஜைகள் மாத்திரம் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

குறித்த விமானத்தில் மருத்துவ அதிகாரிகளும் பயணிக்கவுள்ளனர்.

சீனாவின் வூஹான் பகுதியில் சுமார் 325 இந்தியர்கள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு