15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில், 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட (போக்சோ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரவிகுமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர்(48), எரால்பிராஸ் (58), அபிஷேக் (28), சுகுமாரன் (60), முருகேசன்(54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பாபு (36), பழனி (40), தீனதயாளன் (50), ராஜா (32), சூர்யா (23), குணசேகரன் (55), ஜெயராமன் (26) மற்றும் உமாபதி(42) ஆகிய 17 பேரை கைது செய்தனர்.


இவர்களை குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை மகளிர் நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிர் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக என்.ரமேஸ் நியமிக்கப்பட்டார். இதே போன்று குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் தரப்பில் தனித்தனியாக வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதிட்டனர்.


இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் 120 வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் 15 பேரை குற்றவாளிகளிகளாக தீர்ப்பளித்து தோட்டகாரரான குணசேகரை விடுதலை செய்து உத்தரவிட்டு தண்டனை விவரங்கள் பிப்ரவரி 3- ஆம் தேதி அறிவிப்பதாக உத்தரவிட்டிருந்தது.




அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு