கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக சுகததாச விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ் குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
0 Comments
No Comments Here ..