முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பு அரச பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியோ அல்லது அதற்கு அடுத்தநாளுக்குள்ள வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..