உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணையை புதியதொரு குழுவினூடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான விசாரணையை நடத்துமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தாக்குதல் சம்பந்தமான செய்திகளை புறந்தள்ளியமை, தாக்குதல்தாரிகளுடன் தொடர்பில் இருந்த பிரமுகர்கள், பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள், இந்த சம்பவம் தொடர்பில் ஆசாத் மெளலானா என்பவர் வெளிநாட்டில் வழங்கியுள்ள சாட்சியம் என்பன தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் முக்கிய பிரமுகர்கள் பலர் கைது செய்யப்படலாமென்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை இடம்பெற்று அதிரடியான நடவடிக்கைகள் வருமாயின் அது ஆளுந்தரப்புக்கு மக்கள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யுமென அரச மேல்மட்டத்தில் கருதப்படுவதாக மேலும் தெரியவந்தது.
0 Comments
No Comments Here ..