05,Dec 2024 (Thu)
  
CH
SRILANKANEWS

இலங்கையை விட்டு தப்பியோட தயாராகும் மதுவரித்திணைக்கள உயர் அதிகாரி


மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அரசியல் காரணத்தினால் சட்டத்திற்கு முரணாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


சட்டத்திற்கு முரணாக மதுபான உரிமம் வழங்குவது தொடர்பாக மதுக்கடை உரிமையாளர்களால் உயர் நீதிமன்றத்தில் மதுவரி திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இந்த அதிகாரி தனது விருப்பத்திற்கேற்ப வரம்பற்ற மதுபான உரிமங்களை வழங்க லஞ்சம் பெற்றுள்ளதாக மதுவரி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் எதிர்வரும் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு நாட்டை விட்டு செல்ல தயாராகி வருவதாக மதுவரி திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இலங்கையை விட்டு தப்பியோட தயாராகும் மதுவரித்திணைக்கள உயர் அதிகாரி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு