இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகப்படியாக விராட்கோலி 62 ஓட்டங்களையும், ஜேக்கப் பெத்தேல் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தவறவிட்டது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகப்படியாக, ஆயுஷ் மாத்ரே 94 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 77 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை அதிகப்படியாகக் கைப்பற்றினார்.
0 Comments
No Comments Here ..