இந்திய - பாக்கிஸ்தானுக்கிடையில் போர் பதட்டம் அதிகரித்துவரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பயணிக்க இருக்கின்றார்.
புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக புதின் உறுதியளித்துள்ளார். இதனை இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும் இந்த உரையாடலின்போது இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் புதினை மோடி அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை புதின் ஏற்றுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..