06,Jul 2025 (Sun)
  
CH
உலக செய்தி

சீனாவில் 4 படகுகள் விபத்து 10 பேர் - பாலி எண்ணிக்கை அதிகரிக்குமென அச்சம்.

சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


சீனாவின் குய்சோவு மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மே 1-5 வரை சீனாவின் மே தின விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரே படகில் அதிகமானவர்கள் பயணம் செய்தது விபத்திற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





சீனாவில் 4 படகுகள் விபத்து 10 பேர் - பாலி எண்ணிக்கை அதிகரிக்குமென அச்சம்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு