29,Mar 2024 (Fri)
  
CH
ஜரோப்பா

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது : மிஷேல் பார்னியர்

பிரித்தானியா, கனடாவுடன் கொண்டிருக்கும் அதே வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மிஷேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற்றுக்கு பின்னர் பிரித்தானியாவுக்கு லட்சியக் கூட்டாண்மை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என்றும் மிஷேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் டேவிட் ஃபுரோஸ்ட், பிரஸ்ஸல்ஸில் தெரிவிக்கையில்; கனடாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது என்று கூறிய பின்னர் மிஷேல் பார்னியர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 31 அன்று பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது. எனினும் டிசெம்பர் 31வரை மாற்றக் காலம் உள்ளது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து இரு தரப்பினரும் அடுத்த மாதம் பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளனர்.

டிசெம்பர் 31 க்குள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விதித்துள்ளார். அத்துடன் அதன் பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக் காலத்தை நீட்டிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.





கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது : மிஷேல் பார்னியர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு