26,Apr 2024 (Fri)
  
CH
ஜரோப்பா

கொரோனா வைரஸ் எதிரொலி: எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்கு 200 மில்லியன் யூரோக்கள் நஷ்டம்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால், எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 200 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் மையமிட்ட கொரோனா வைரஸ், அசுர வேகத்தில் உலக நாடுகளுக்குப் பரவியதால் பல நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததோடு, சீனாவுக்கான விமானப் போக்குவரத்தையும் ரத்துச் செய்தன.

இதற்கமைய எயார் பிரான்ஸ் நிறுவனமும் பெப்ரவரி மாதத்தில் இருந்து வரும் ஏப்ரல் மாதம் வரை சீனாவுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியது.

இதனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் €150 மில்லியன் யூரோக்களில் இருந்து €200 மில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் மொத்தமாக 12பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

பிரான்சுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளில் அதிகமானோர் சீன நாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





கொரோனா வைரஸ் எதிரொலி: எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்கு 200 மில்லியன் யூரோக்கள் நஷ்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு