ஆயிரக்கணக்கான உயிர்களை காவுக்கொண்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால், தற்போதைய நிலவரப்படி தொடர்ந்தும் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேர்களில் ஐவர் பிரித்தானியர்கள் எனவும், ஒருவர் 50 வயதுடைய சீன பெண் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இடம்பெற்ற முதல் உயிரிழப்பு பிரான்ஸில் கடந்த வாரத்தில் பதிவானது. 80 வயதுடைய சீன சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
பிரான்ஸில் மொத்தமாக 12பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
0 Comments
No Comments Here ..