23,Jan 2026 (Fri)
  
CH

சகோதரனை ஆயுதத்தால் தாக்கி நபர் - கைது

பதுளை நகரில் நேற்று பிற்பகல் தமது சகோதரனை ஆயுதத்தினால் தாக்கி பலத்த காயமடையச் செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தனிப்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர், சில மாதங்களுக்கு முன்பாக தமது இளைய சகோதரரின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமை தெரியவந்துள்ளது.


சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சையிலிருந்து மீண்டுவந்த குறித்த நபர், இன்றைய தினம் தமது சகோதரனை பதிலுக்குத் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவத்தின் பின்னர், குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் அவரை பதுளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தாக்குதலில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




சகோதரனை ஆயுதத்தால் தாக்கி நபர் - கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு