உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக போர்த்துகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தனது வாழ்நாளில் ஐந்து முறை இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் ரொனால்டோ, தனது மதிப்பிடப்பட்ட மொத்த வருவாயை 15 மில்லியன் டொலர்களாக அதிகரித்து 275 மில்லியன் டொலர்களாக உயர்த்தியுள்ளார் என்று வர்த்தக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருவாய் முன்னாள் உலக சம்பியன் குத்துச்சண்டை வீரர் பிளொயிட் மேவெதருக்கு மாத்திரமே பின்தங்கியுள்ளது. மேவெதர் 2015 இல் 300 மில்லியன் டொலர்களையும் 2018 இல் 275 டொலர்களையும் ஈட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தாலிய கழகமான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பின், ரொனால்டோவின் ஆண்டு வருமானம் 200 மில்லியன் டொலரைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டொலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..