24,Dec 2025 (Wed)
  
CH

அஸ்வெசும நிவாரணம் பெறும் 70 வயதுக்கு மேற்ப்பட்டோர்களுக்கான கொடுப்பனவு

அஸ்வெசும நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


அதன்படி, பயனாளிகள் இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் குறித்த கொடுப்பனவுகளைப் பெற முடியும் என அந்த சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


592,566 பயனாளிகளுக்கான 2,963 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




அஸ்வெசும நிவாரணம் பெறும் 70 வயதுக்கு மேற்ப்பட்டோர்களுக்கான கொடுப்பனவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு