கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா, இன்று செவ்வாய்க்கிழமை 03ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 6.00 மணிக்கு மும்மொழிகளிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதனையடுத்து கொடியேற்றம் இடம்பெறவுள்ளது. 11ஆம் திகதி வரை தினமும் மாலை 06 மணிக்கு நவநாள் வழிபாடுகள் நடைபெறுவதுடன் 12ஆம் திகதி இரவு 07 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில், விசேட நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.
திருவிழா தினமான 13ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் மீண்டும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
திருவிழா கூட்டுத் திருப்பலிகள் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில், தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும் நடைபெறவுள்ளன.













0 Comments
No Comments Here ..