21,Aug 2025 (Thu)
  
CH
உலக செய்தி

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு; வெளியேறிய மக்கள்

இத்தாலியின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை திங்கட்கிழமை (03.06.2025) திடீரென வெடித்தது. தகவலறிந்து மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.


சுற்றுலாப் பயணிகள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். 


எரிமலையிலிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளியேறி வருகிறது. சில மணிநேரங்களாக எரிமலையிலிருந்து சாம்பல் வெளியேறி வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


மவுண்ட் எட்னா கடந்த ஐந்து ஆண்டுகளாக எரிமலை தொடர்ந்து பலமுறை வெடித்து வருவதாக இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. 




மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு; வெளியேறிய மக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு