ஆமீர் கான் நடித்திருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ரிலீஸையொட்டி படத்தைப் புரொமோட் வேளைகளில் ஆமீர் கான் ஈடுபட்டுவருகின்றார்.
இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஆமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அப்போதிருந்து ஆமீர் கான் 'கூலி' படத்தில் கேமியோ செய்திருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் எழுந்திருக்கிறது.
'சித்தாரே ஜமீன் பர்' படத்திற்காக அளித்த சமீபத்திய பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார்.
அவர், "லோகேஷும் நானும் இணைந்து ஒரு திரைப்படம் செய்யவிருக்கிறோம். அது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம்.
ஆக்ஷன் படமாகப் பெரிய ஸ்கேலில் படம் உருவாகவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் திரைப்படம் 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும்.
0 Comments
No Comments Here ..