சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்குப் கருத்து வௌியிட்ட உதய கம்மன்பில, 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருப்பதாகவும், ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன் என்றும், இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..