அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் க்கும் தொழிலதிபர் எலன் மாஸ்க்கிட்கும் இடையில் மோதல் ஏற்பட்டுவரும் நிலையில், ‘’தி அமெரிக்கன் பார்ட்டி’’ என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொதுவெளியிலேயே சண்டையிட்டு வந்தனர்.
இதனிடையே, 80 சதவிகித நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.
இந்தக் கருத்துக் கணிப்புக்கு 80 சதவிகிதத்தினர் “ஆம்” என்று பதிலளித்த நிலையில், புதிய கட்சிக்கு “தி அமெரிக்கன் பார்ட்டி” என்று எலான் மஸ்க் பெயரிட்டு அறிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..