ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம் சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.
இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
0 Comments
No Comments Here ..