பசு ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம், விஹாரபலுகம, வித்யாராஜ பாடசாலையில், 4 ஆம் வகுப்பில் கற்கும் 9 வயதான சிறுவனே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
பக்கத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த பசு, கிளர்ந்தெழுந்து வீதியில் வேகமாக ஓடியுள்ளது.
இதன்போது, பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் குறித்த சிறுவன் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பசுவினால் சிறுவன் பல மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் குறித்த சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைகளுக்குப் பின்னர் மருத்துவமனையில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..