இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்திற்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகக் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று முதல் மக்கள் அங்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..