08,Feb 2026 (Sun)
  
CH

பீப்பாய்கள், கேன்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உடனடியாக நிறுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தேவையற்ற கூட்டத்தையும் வரிசைகளையும் உருவாக்குவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


நுகர்வோர் பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் பெறுவதற்காக தானாகவே எரிபொருள் நிலையங்களில் கூடுவதால், தேவையற்ற நெரிசலும் நீண்ட வரிசைகளும் ஏற்படுவதாக CEYPETCO சுட்டிக்காட்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்தத் தடை குறித்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அறிவுறுத்தலை மீறி செயல்படும் பட்சத்தில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.


நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தின் காரணமாக இவ்வாறு செயல்படுவதாலேயே பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.




பீப்பாய்கள், கேன்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு