மேஷம்;
தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு தவிர்த்து கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
ரிஷபம் ;
தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். சகோதரர்கள் தங்களை தேடி வந்து மன்னிப்பு கேட்டுப் பின் தங்களிடம் அன்பு பாராட்டுவர். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்குண்டான வழி பிறக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள்.
மிதுனம்;
திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தள்ளிப் போடுவர். தங்கள் துணைவர் தங்கள் சொல்படி நடப்பார். தங்களுடைய கருத்தில் சில உண்மை நிலைகளை அவர் உணர்வார். காதலர்கள் முதலில் பெற்றோர்களுக்கு தங்களின் கடமையை செய்து விடுவர். பணவரவுக்கு பஞ்சமில்லை.
கடகம்;
விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார்.
சிம்மம்;
இன்று மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். உத்திரம் நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
கன்னி;
பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. வயதானவர்கள் தீர்க்கயாத்திரை மேற்கொள்வர். ஒரு சிலருக்கு கேட்ட இடத்திற்கே உத்யோக மாற்றம் கிடைக்கும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். காதலர்கள் தங்கள் வேலை தேடும் உடல் நலம் சிறக்கும்.
துலாம்;
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர். வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும்.
விருச்சிகம்;
பெற்றோர்கள் தங்கள் சொத்தினை சரிபாதியாக பிள்ளைகளுக்கு பிரித்து வைத்துவிடுவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்குண்டான ஆர்டர்களையும் லாபத்தையும் பெறுவர். மாணவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டை பெறுவர்.
தனுசு;
எதிரிகள் தங்களிடம் சரணடைவர். வழக்குகள் தங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்த்த நபர் தங்களை தேடி வருவார். நீண்ட நாள் நினைவலைகளை அசைபோடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புத் தருவர். எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும்.
மகரம்;
பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.
கும்பம்;
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். முதுகு தண்டில் வலி வந்துப் போகும். தம்பதிகளிடையே நல்ல புரிதல் உருவாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
மீனம்;
கல்விக் கடன் மற்றும் வீட்டுக் கடன் அவைகளை சரிவரக் குறித்த நேரத்தில் கட்டிவிடுவீர்கள். பெற்றோர்கள் மீது பிள்ளைகளின் அன்பு அதிகப்படும். ஆதலால், அவர்களின் தேவையை தாங்களாகவே நிறைவேற்றி விடுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
0 Comments
No Comments Here ..