10,Jun 2026 (Wed)
  
CH

வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

வடக்கு ஈரானில், ரிக்டர் அளவில் 5.1 அளவுள்ள நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.


ஈரானிய ஊடகங்களின்படி, இந்த நிலநடுக்கம் செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றிய பகுதிகளிலும், அத்துடன் சோர்கேயிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் (93 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு