08,Jul 2025 (Tue)
  
CH

புத்தளம் மருத்துவமனையில் குளியலறையில் சிசு சடலம் மீட்பு: யுவதி கைது

புத்தளம் மருத்துவமனையில் பெண்கள் சிகிச்சை பெறும் அறையின் குளியலறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.


குறித்த யுவதி புத்தளம் பகுதியில் உள்ள மசாச் மையத்தில் தொழில் புரியும் புத்தளம் - ஆணவாசல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட யுவதி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்றெடுத்து அதனை குளியலறையில் வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அறைக்கு பொறுப்பான தாதியர் ஒருவரால் காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில். குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட யுவதி காவல்துறையினரின் பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த மரணம் தொடர்பில் புத்தளம் பதில் நீதவான் டி.எம். இந்திக தென்னகோன், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





புத்தளம் மருத்துவமனையில் குளியலறையில் சிசு சடலம் மீட்பு: யுவதி கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு