ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அது வெற்றியடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல் ட்ரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் தெரிவித்துள்ளார் .
அவர் குறிப்பிட்டுள்ளதாவது "நேற்று சனிக்கிழமை அமெரிக்க இராணுவம் ஈரானின், அணுசக்தி நிலையங்களான "ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில் பதிவில் அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம் என்றும். அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் குண்டுகள் வீசப்பட்டன.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..