20,Jun 2026 (Sat)
  
CH

வாகன விபத்து: வந்தாறுமூலையில் இருவர் பலி, ஒருவர் படுகாயம்

இன்று (ஜூன் 23) அதிகாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, இரண்டாவது மைல் கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் காரின் சாரதியும் 15 வயது சிறுமியும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார், இரண்டாவது மைல் கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


மட்டக்களப்பு, சின்ன ஊறணி, கருவப்பங்கேணி, செலியன் வீதி, இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த காரின் சாரதியான ஜெந்திரகுமார் சஞ்சய் மற்றும் 

கருவப்பங்கேணி, நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பிரதீபன் தவஸ்வாணி ஆகியோரே இந்த விபத்தி உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தியே விபத்தில் படுகாயமடைந்தவர் ஆவார். இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் பெற்றுக்கொண்டு வருகின்றனர்.




வாகன விபத்து: வந்தாறுமூலையில் இருவர் பலி, ஒருவர் படுகாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு