19,Jun 2026 (Fri)
  
CH

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கையில்; நல்லிணக்கம், மனித உரிமைகள் குறித்துப் பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்படப் பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் சந்திப்பு

வோல்கர் டர்க்குடனான சந்திப்பு தொடர்பில் தனது X சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைப் பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 


இருவரும் மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர விடயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


அத்துடன், புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து தேசிய நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் வோல்கர் டர்க்கிற்கு தாம் விளக்கியதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கையில்; நல்லிணக்கம், மனித உரிமைகள் குறித்துப் பேச்சு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு